காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில், வரும் ஜூலை மாதம் 11ஆம் நாளன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்திட, அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
காயல்பட்டணம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் 27-06-2015 சனிக்கிழமை ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள எமது அலுவலக கூட்டரங்கில், இரவு 10:30 மணியளவில் நடைபெற்றது. எமது மன்றத்தின் நிறுவனர் எஸ்.எம்.பி.செய்யிது அஹ்மது அஸ்ஹர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
துவக்கமாக உறுப்பினர் M.A.C.சுஹைல் இப்ராஹிம் இறைமறை ஒதினார். அதனை தொடர்ந்து, துணைத்தலைவர் A.R.சேக்முகம்மது வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து பங்கேற்றோரின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. நிறைவாக, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 - இஃப்தார் நிகழ்ச்சி:
கடந்த வருடங்களைப் போல, இவ்வருடம் ரமழான் பிறை 23, ஆங்கில தேதி 11.07.2015 சனிக்கிழமையன்று இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, உறுப்பினர் நாஸர், உறுப்பினர் ஆஸிஃப், உறுப்பினர் செய்யிது, உறுப்பினர் யூசுப், உறுப்பினர் மொகுதூம் ஆகிய 5 பேர் குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 2 - ஏழைகளுக்கு இலவச அரிசி:
காயல்பட்டணத்திலுள்ள ஏழை எளியோருக்கு ரமழானை முன்னிட்டு முந்தைய வருடம் போல், இவ்வருடமும் இலவச அரிசி வழங்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3-காகுக்கும் கரங்கள் அங்கத்தினர் ஒன்றுகூடல்:
இவ்வாண்டு காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனையாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் ஜுலை 11,2015 தேதி நடத்திட ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் நிறுவாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இருதியாக துஆவுடன் இக்கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |