இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நடப்பு ரமழான் 25ஆம் நாளன்று, காயல்பட்டினம் நகரின் ஏழைக் குடும்பத்தினருக்கு, ரமழான் - நோன்பு கால அரசி இலவச வினியோகம் செய்வதென ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளையின் ஊழியர் கூட்டம், 22.06.2015 திங்கட்கிழமையன்று 22.30 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்றுப் பேசினார்.
மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நடப்பாண்டு ரமழான் மாதத்தில் - வழமை போல காயல்பட்டினம் நகரின் ஏழை - எளிய குடும்பத்தினருக்கு அரசி இலவச வினியோகம் செய்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ரமழான் 25 அன்று இலவச அரிசி வினியோகம்:
காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஏழை-எளிய மக்கள் 1200 பேருக்கு, நோன்பு கால இலவச அரிசியை, ரமழான் பிறை 25 அன்று மாலை 16.30 மணியளவில், கட்சியின் அலுவலக வளாகத்தில் வைத்து வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - இலவச அரிசி வினியோக சென்ற ஆண்டு கணக்கு தாக்கல்:
சென்ற ஆண்டு நோன்பு கால இலவச அரிசி வழங்கப்பட்டது தொடர்பான வரவு-செலவு கணக்குகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு, ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
தீர்மானம் 3 - இலவச அரிசி நிதி சேகரிப்புக் குழு:
நடப்பாண்டு இலவச அரிசி வினியோகத்திற்கான நிதியை சேகரிப்பதற்கு,
(1) வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
(2) எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
(3) ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ்
(4) அரபி ஷாஹுல் ஹமீத்
ஆகியோர் குழுவினராக நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கலந்தாலோசனைக் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் நகர நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ரமழானில் நடைபெற்ற ஏழை மக்களுக்கான அரிசி வினியோகம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |