காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில், நடப்பு ரமழான் மாதத்தின் எல்லா நாட்களது ளுஹ்ர் தொழுகையிலும் தவறாமல் காணக் கிடைக்கும் காட்சிகள்தான் இவை!
எல்.கே.மேனிலைப்பள்ளியில் மதிய இடைவேளையின்போது, ளுஹ்ர் தொழுகைக்காக அப்பள்ளி மாணவர்கள் - பல்வேறு பள்ளிகளிலும் தொழுது வந்த நிலை மாறி, ஒட்டுமொத்தமாக இங்கு வந்து குவிவதால், ஜும்ஆ நாளைப் போல உள்பள்ளி நிறைந்தே காணப்படுகிறது. தொப்பியின்றி வருவோருக்காக அப்பள்ளியில் இரண்டு கூடைகள் நிறைய வைக்கப்பட்டிருக்கும் தற்காலிக தொப்பிகளும் இவ்வேளைகளில் தீர்ந்து போகின்றன.
நடப்பாண்டில் கோடை காலம் துவங்கியதிலிருந்தே இப்பள்ளியில் ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளுக்கு ஏர் கண்டிஷன் போடப்படுவது வழமை. நடப்பு ரமழானிலும் கோடை வெப்பம் தாங்க முடியாத அளவுக்குத் தொடர்வதால், மற்ற நாட்களை விட ரமழானில் கூடுதலாகவே ஏசி போடப்படுகிறது.
தொழுகைக்காக ஏசி பள்ளியையும், ஏசிக்காக தொழுகைப் பள்ளியையும் மாணவர்கள் நாடுவதாலேயே இக்கூட்டம் காணப்படுகிறது.
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|