காயல்பட்டினத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ். முடித்த மாணவருக்கு தகுதி (மெரிட்) அடிப்படையில், எம்.டி. மருத்துவப் படிப்பு பயில இடம் கிடைத்துள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் தைக்காத்தெருவைச் சேர்ந்த மாணவர் எஸ்.ஓ.சுலைமான். இவர், மர்ஹூம் ஹாஜி மைனர் எம்.எல்.அஹ்மத் முஸ்தஃபா, மர்ஹூம் ஹாஜி எஸ்.ஓ.சுலைமான் ஆகியோரின் பேரனும், ஹாஜி எச்.எம்.கியாத் என்பவரின் தம்பி மகனும், எம்.எஸ்.செய்யித் உமர் - ஏ.எம்.ஃபாயிஜா தம்பதியின் மகனுமாவார்.
தனது பள்ளிப்படிப்பை காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் நிறைவு செய்தார். ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதையடுத்து, தகுதி (மெரிட்) அடிப்படையில், மருத்துவம் பயின்று, 2013ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவர் பட்டம் பெற்றார்.
சென்னை ஆயிஷா மருத்துவமனையில் ஓராண்டுக்கும் மேலாக மருத்துவ சேவையாற்றி வந்த அவர், இந்திய தலைநகர் டில்லியிலுள்ள - தலைசிறந்த கல்வி நிறுவனமான All India Institute of Medical Science – AIIMS-இல் நடைபெற்ற கலந்தாய்வில், தகுதி (மெரிட்) அடிப்படையில் தேர்வாகி, M.D. (Pathology) படிப்பை 3 ஆண்டுகள் பயிலவுள்ளார்.
மெரிட்டில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ள இம்மாணவரை, அவரது உறவினர்களும், நகரின் சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.
தகவல் & படம்:
ஜெய்னுல் ஆப்தீன்
A.S.முஹ்யித்தீன்
A.S.புகாரீ |