சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தின் 72ஆவது பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய தலைவருக்கு இக்கூட்டத்தில் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சௌதி அரேபியா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 72வது பொதுக்குழு கூட்டம், 19.06.2015 அன்று தம்மாம் ‘கய்யாம்’ உணவக அரங்கில் வைத்து நோன்பு திறப்பு நிகழ்வும் ஒருங்கிணைந்து மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்வில் பெருந்திரளான உறுப்பினர்களும், குடும்பங்களும், வெளி ஊர் சகோதரர்களும் கலந்து சிறப்பித்தனர். அல்ஹம்து லில்லாஹ் .
இந்த நிகழ்ச்சியை இளவல் அன்வர் சயீத் இறைமறை வசனத்தை கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். வந்து இருந்த அனைவர்களையும் மன்றத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான சகோதரர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் வரவேற்றார்.
பின்பு, தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் மூத்த அழைப்பாளர் மௌலவி நூஹு மஹ்லரி ஆலிம் அவர்களின் மார்க்க உரை நடைபெற்றது. இவர்களின் உரையில் ரமலானில் பேணவேண்டிய ஒழுக்கங்களும், வணக்கங்களும் எப்படி அமைய வேண்டும் என்று அருமையாக அமைந்தது. இவர்களின் உரை நோன்பு திறக்கும் நேரம் வரை அமைந்து.
அடுத்து, நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்வு நடைபெற்று, மக்ரிப் தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டு முதல் அமர்வு நிறைவு பெற்றது. மக்ரிப் தொழுகைக்கு பின்பு, இரண்டாம் அமர்வு துவங்கியது.
முதலில், மன்றத்தின் தலைவர் சகோதரர் ஜனாப் அஹமது ரபீக் அவர்கள் மன்றத்தின் செயல்பாடுகள், சென்ற பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழு விற்கும் இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட உதவிகளையும் பட்டியலிட்டு விரிவாக விளக்கினார். புதிதாய் வந்துள்ள நம் சகோதரர்களை மனதார வரவேற்று, ஒற்றுமையின் சிறப்பை கூறினார்.
தலைவரின் உரையை தொடர்ந்து, இன் நிகழ்வை ஒருங்கிணைத்துக் கொண்டு இருந்த மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் செய்யது இஸ்மாயில் (தம்மாம் இஸ்மாயில்) அவர்கள், மன்றத்தின் மக்கள் நலப் பணிகளை சற்று விரிவாக விவரித்தார்.
அதில் குறிப்பாக நமதூர் இறை இல்லங்களில் பணிபுரியும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், வழமையாக ரமலான் காலங்களில் வறுமை நிலையில் இருக்கு மக்களுக்கு உதவும் ரமலான் உணவு திட்டம், இக்ரா மூலம் ஏழை மாணவி / மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டம், ஷிஃபா மூலமாக மக்களுக்கு உதவும் மருத்துவ உதவி போன்ற வகைகளை விவரித்து, அதில் நம் மன்றத்தின் பங்களிப்புகளை கூறினார். மன்ற உறுப்பினர்கள் உற்சாகத்துடன் தங்களின் பங்களிப்பை மீண்டும் வாரி வழங்கினார்கள்.
மேலும் மன்ற உறுப்பினர்களிடம் இருந்து சதக்க / ஜகாத் வசூலித்து அதை உரியவர்களுக்கு வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் அனேக சகோதரர்கள் தங்களின் ஜகாத்/சதக்க வகைகளை கொடுத்தார்கள். அல்ஹம்து லில்லாஹ்.
நமது இக்ரா-விற்கு புதிதாய் தலைமை பொறுப்பேற்று இருக்கும் கத்தார் காயல் நற்பணி மன்றதின் தலைவர் சகோதரர் பஃஜூல் கரீம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அடுத்ததாக புதிதாய் வந்துள்ள சகோதரர்களான
ஜனாப் P.M.H. முஹம்மது இக்பால்,
ஜனாப். P.M.T. முஹம்மது அபூபக்கர்,
ஜனாப் P.M.T. செய்யது இஸ்மாயில்,
ஜனாப் M.M.S. அஹமது முஹைதீன்
ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு மன்றத்தில் இனைத்துக் கொண்டார்கள். அல்ஹம்து லில்லாஹ்.
இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வெளியூர் சகோதரர்களான பொறியாளர் ஜனாப் ஜகரிய்யா மற்றும் ஜனாப் ஆஷிக் அவர்கள் தங்களின் கருத்துக்களை வழங்கினார்கள்.
பின்பு, உறுப்பினர்களின் கருத்து கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் சகோதரர்கள் புஹாரி, ஹாஃபில் H.A. இஸ்மாயில் ஆகியோர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இறுதியாக, ஆக்சன் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஜனாப் இம்தியாஸ் புஹாரி அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, அனைவர்களுக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டு மன மகிழ்வோடு இனிதாய் நிறைவேறியது இந்த பொதுக்குழு கூட்டம். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முத்துவாப்பா புகாரீ
(தகவல் தொடர்பாளர் - தம்மாம் கா.ந.மன்றம்)
தம்மாம் காயல் நல மன்றத்தின் முந்தைய (71ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |