மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தா நகரில், காயலர்கள் ஏற்பாட்டில் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் ரமழான் மாதம் முழுக்க இஷா மற்றும் தராவீஹ் தொழுகை கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோல்கத்தா ஜக்கரிய்யா தெருவிலுள்ள KAZ லுங்கி கம்பெனி வளாகத்தில், அன்றாடம் 21.00 மணியளவில், இஷா மற்றும் தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் ஹஸன் ரிழா இல்மீ தொழுகையை வழிநடத்தி வருகிறார். நிறைவில் அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்படுகிறது.
கோல்கத்தாவில் வசிக்கும் லுங்கி - மாணிக்கக் கல் வணிகர்கள் அனுசரணையில், 1975ஆம் ஆண்டிலிருந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சாளை பஷீர் |