சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றம் சார்பில், நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு 125 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டுள்ளதோடு, நோன்புப் பெருநாளன்று நாட்டுக் கோழி வழங்கவும் ஆவன செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றம் சார்பில், கடந்த சில வருடங்களாக புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பல ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும், கடந்த ஓராண்டாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் சில குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும் இறையருளால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ரமழான் நோன்பை முன்னிட்டு ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் 125 ஏழைக் குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அத்துடன் பெருநாளை முன்னிட்டு இவர்கள் அனைவருக்கும் நாட்டுக் கோழி வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ரூ.2,641 மதிப்பில், 125 குடும்பங்களுக்கு - ரூ.3,30,125 செலவில் நோன்பு கால அத்தியாவசிய உணவுப் பொருட்களும், கூடுதல் திட்டமாக ரூ.40,000/- செலவில், இந்த அனைத்து குடும்பத்தினரும் பெருநாளன்று இரவு ஒரு உறித்த நாட்டுக் கோழி பெற்றுக் கொள்ளும் வகையில் அதற்கான டோக்கனும், மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில் ரியாத் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் பி.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை, மன்றத்தின் ஆலோசகர் கூஸ் எஸ்.ஏ.டி.முஹம்மத் அபூபக்கர், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பயனாளிகளின் இல்லம் சென்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கிட பொருளுதவி செய்த மன்ற அங்கத்தினர், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் ரியாத் காயல் நல மன்ற நிர்வாகம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது. ஜஸாக்குமுல்லாஹு கைரா!
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நோனா செய்யித் இஸ்மாஈல்
செய்தி தொடர்பாளர் - ரியாத் கா.ந.மன்றம்
ரியாத் காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் வழங்கப்பட்ட அத்தியாவசிய சமையல் பொருளுதவி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |