காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 30.05.2015 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை (ஸனது) வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றினார். இவ்விழாவில், 6 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெற்றனர்.
பின்னர், கடந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் அங்கம் வகித்த சிறப்பு விருந்தினர்களும், முன்னிலையாளர்களும் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினர்.
கல்லூரியின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நெல்லை மாவட்ட தலைவர் மவ்லவீ டீ.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜீ, மவ்லவீ ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஓ.எம்.அப்துல் காதிர் பாக்கவீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் உதவி செயலாளர் ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, கணக்குத் தணிக்கையாளர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) உள்ளிட்ட நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
படங்கள்:
ஃபாஸில் ஸ்டூடியோ
மஹ்ழரா அரபிக்கல்லூரியில் கடந்தாண்டு (1435) நடைபெற்ற பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்புச் செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |