ஜூன் 18ஆம் நாள் வியாழக்கிழமையன்று (நாளை) ரமழான் முதல் நாள் என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவித்துள்ளது.
அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ - நேற்று (ஜூன் 16 செவ்வாய்க்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின் பேசுகையில்,
ரமழான் தலைப்பிறை தென்பட்ட தகவல் பெறப்பட்டால், ஜூன் 17ஆம் நாள் புதன்கிழமையன்று (இன்று) ரமழான் முதல் நோன்பு என்றும், அவ்வாறு அறிவிப்பு வெளியிடப்படவில்லையெனில், மறுநாள் ஜூன் 18ஆம் நாள் வியாழக்கிழமையன்று (நாளை) முதல் நோன்பு என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் படி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தினர் நாளை ரமழான் முதல் நோன்பு நோற்கவுள்ளனர்.
தகவல்:
M.A.அப்துல் ஜப்பார்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) அல்ஜாமிஉல் அஸ்ஹரின் ரமழான் தலைப்பிறை அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |