ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 25ஆம் நாளன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும் என அதன் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காயலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ளுமாறும், அம்மன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தயறிக்கை:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ், நமது மன்றத்தின் சார்பாக வரும் 25 - 06 -2015 வியாழன் கிழமை மாலை, ரமழான் முதல் வாரத்தில் நமது மன்ற அனைத்து உறுப்பினர்கள் மற்றும் புதிதாக அபுதாபி அமீரகத்தில் குடியேறி உள்ள காயல் சகோதர்கள் மற்றும் குடும்பத்தர் அனைவர்களுக்கும் ஸலாம் தெரு, அல்பிர்தௌஸ் டவர் (NATIONAL BANK OF FUJEIRA & OLD TAQREER BLDG) 3 வது மாடியில் அமைந்துள்ள "அரபு உடுப்பி" [ ARAB UDUPI ] -ன் பேன்குவெட் ஹாலில் [Banquet Hall ] வைத்து இஃப்தார் - நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயல் சகோதர்கள் இச்செய்தியை அழைப்பாக கருதி தங்கள் குடும்பத்துடன் குறித்த நேரத்தில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். கருணையுள்ள ரஹ்மான் இந்த சங்கைமிகுந்த ரமழானின் பொருட்டால் நமது பாவங்களை மன்னித்து ஈருலக நன்மைகளை தந்தருள்வானாக ஆமீன்.
குறிப்பு: நமது மன்றத்தின் மூலம் தனியாக வாகன ஏற்பாடு இல்லாததால் உறுப்பினர்கள் தங்களின் சொந்த முயற்ச்சியில் குறித்த நேரத்திற்கு வருகை தந்து சிறப்பிக்க கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் உறுப்பினர்கள் இணைச் செயலாளர் கே.ஹுபைப் [050 849 0978 ], மற்றும் டாக்டர் விளக்கு எஸ்.செய்யித் அஹ்மத் [050 945 04 04] ஆகியோர்களின் எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அபூதபீ காயல் நல மன்றத்தின் 32 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 12-06-2015 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் [பாதுல் அஷ்ஹாப்] அவர்களின் தலைமையில் செயற்குழு உறுப்பினர் மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் வைத்து கூடியது. ஹாஃபிழ் நஹ்வி. S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
பொதுக்குழுவிற்கான ஏற்பாடு!
இன்ஷாஅல்லாஹ் நமது மன்றத்தால் நடத்த இருக்கும் பொதுக்குழுவின் ஏற்பாடுகளின் விவரங்களை ஏற்கனவே உறுபினர்களுக்கு பொறுப்புகள் வழங்கியதன் படி முடிக்கப்பட்ட மற்றும் முடிக்கவேண்டிய பணிகள் விரிவாக விவாதிக்கப்பட்டு விரைவில் முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
காயலின் பொதுவான தேவைகள் மற்றும் உதவி நலத்திட்டங்கள் ஓர் அலசல்!
நமதூரின் பொதுவான தேவைகள், உதவி நலத்திட்டங்கள் இவைகளை அலசி, ஆராய்ந்து, நிவர்த்தி செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
நிலுவையில் உள்ள சந்தா தொகைகளை உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் என்று கேட்டு கொண்டதோடு, அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 14 – 08 - 2015 ஆம் தேதி வெள்ளியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் செயலாளர் V.S.T.ஷேக்னா லெப்பை அவர்கள் அறிவிக்க ஹாஃபிழ் நஹ்வி. S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக
தகவல்:
M.E. முகியதீன் அப்துல் காதர்
(செய்தி மற்றும் ஊடகத் துறை பொறுப்பாளர்)
படங்கள்:
M.O.அன்ஸாரீ
அபூதபீ கா.ந.மன்றத்தின் முந்தைய (31ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ கா.ந.மன்றத்தின் முந்தைய (5ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |