Re:... posted byVilack sma (jeddah)[20 June 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41045
நமதூர் பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை . சமூகத்தை யோசிக்க வைத்த கட்டுரை .
தாய்மொழி மிக அவசியம் . சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிறமொழிகளும் தேவை .
தனியார் பள்ளியில் சேர்த்தல் ஆங்கில அறிவு நன்றாக இருக்கும் என்பது பொதுவான ஒரு குருட்டு நம்பிக்கைதான் . S .K . சாலீஹ் சொன்னதுபோல , தனியார் பள்ளியில் படித்தவர்கள் அத்தனை பேருக்கும் ஆங்கில அறிவு நன்றாக உள்ளதா என்று பார்த்தால் கொஞ்சம் கஷ்டம்தான் . வாசிக்க தெரியும் , பொருள் தெரியாது . உண்மைதான் .
இன்று தினமலரில் ஒரு செய்தி . " அசத்தல் " இன்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர் . இதுதான் செய்தியின் தலைப்பு . இதற்கு கமெண்ட் பகுதியில் ஒருவர் சொல்கிறார் , " அரசு பள்ளிகள் , என்றால் ஏன் எல்லோரும் தரம் தாழ்த்தி நினைக்க வேண்டும் ? இங்கே, உள்ள தலைப்பும் ''' இன்ஜினியரிங் தரவரிசைப் பட்டியலில் அரசு பள்ளி மாணவர் அசத்தல் ''' ஏன் ? அரசு பள்ளி மாணவர் அசத்தல் கூடாது அரசு பள்ளி என்றால் கேவலமா ?. " என்கிறார் . உண்மைதானே !
அரசு பள்ளிகளை இவ்வாறு ஆதரிக்கிரோமே . ஒருவேளை மாணவர்கள் பெரும்பாலானோர் அரசு பள்ளிகளுக்கு படையெடுத்தால் அங்கு வசதிகள் சரிவர உள்ளதா என்று பார்த்தால் கொஞ்சம் கஷ்டம்தான் . ஆசிரியர்கள் பற்றாக்குறை , வகுப்பறை போதுமானதாக இருக்காது , உட்கார பெஞ்ச் இருக்காது . இவற்றை சீர் செய்ய அரசும் முன்வர வேண்டும் .
தாய்மொழியோ பிறமொழியோ இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்பதான் அவற்றை வளர்த்துக்கொள்ள முடியும் . தாய் மொழி பேசும் பலருடன் வேலை பார்க்கும் ஒருவர் , என்னதான் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் அங்கே தாய் மொழிதான் மேலோங்கி நிற்கும்.
சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிறமொழிகளை படிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும் . ஆங்கிலமே தெரியாது என் பையனுக்கு , ஆனால் இப்போ தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசுறான் என்றால் சூழ்நிலை . அவர் பார்க்கும் வேலை அப்படி .
கட்டாயத்தின்பேரில் ஆங்கிலம் பேசுகிறான் . அதற்காக தாய்மொழியை மறந்துவிட்டான் என்றில்லை.
ஆனால் ஒருசிலர் , நண்பர்களிடமும் , உறவினர்களிடமும் பேசும்போது , ஆங்கில புலமையை காட்டுவார்கள் . அப்போது கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும் .
நமதூர் பெண்களின் கல்வி : கட்டுரையாளர் சொன்னதுபோல் , நமதூர் பெண்களை எவ்வித நோக்கமும் இல்லாமல் ஏதாவது ஒன்றை படிக்க வைப்பதுதான் பாஷன் ஆகிவிட்டது . ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் நவீன இன்டர்நெட் யுகத்திற்கு ஈடுகொடுக்க ஏதாவது ஒரு டிகிரி வேண்டும் என்பதற்காகத்தான் படிக்கிறார்களே தவிர , படிப்பை கொண்டு குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த பயன்படுத்துவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும் .
இதற்கு எதற்கு BBA , BSC , BCom என்று படிக்க வேண்டும் . வேலைபார்த்து பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த இடத்தை விட்டு கொடுக்கலாமே . திருமணம் முடிந்ததும் வீட்டில்தான் இருக்கப்போகிறோம் என்று முடிவெடுப்பவர்கள் Home Science படித்தால் அவர்களுக்கும் உதவியாக இருக்கும் . நமதூரை பொறுத்தவரை பெண்கள் திருமணம் ஆனதும் எப்படி இருக்க போகிறோம் என்பது ஓரளவு தெரிந்ததுதான் . அதற்கு ஏற்ப நமது படிப்பையும் தேர்வு செய்யலாமே .
இன்னும் நிறைய எழுதலாம்தான் . ரொம்ப நீண்டுகொண்டே போகும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross