Re:...ஹிந்து தமிழ் நாளிதழ் மக்கள் கருத்தை கேட்டது... posted bymackie noohuthambi (kayalpatnam)[29 June 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41187
'கட்டாய ஹெல்மெட்' எந்த அளவுக்கு சாத்தியம்?- உண்மை சொல்லும் மக்கள் மனசு. தமிழ் ஹிந்து நாளிதழ் மக்களிடம் பெட்டி கண்டது.
அதில் மக்கள் பேசுவதை கேட்கும்போது ஒரு விஷயம் புரிகிறது. இந்த நாட்டில் சட்டத்தை மதிக்கும் போக்கு இல்லை. ஏதாவது சாக்குபோக்கு சொல்கிறார்களே தவிர பரீட்சித்துத்தான் பார்ப்போமே என்ற மனோநிலை இல்லை.
இங்கே குப்பை கொட்டாதீர்கள் என்று எழுதினால் அங்கேதான் குப்பை கொட்டுகிறார்கள். இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள் என்றால் அங்கேதான் சிறுநீர் கழிக்கிறார்கள்.. இங்கே வாகனம் நிறுத்தாதீர்கள் என்று எழுதினால் அங்கேதான் வாகனங்களை நிறுத்துகிறார்கள் காவல் துறையினருக்கு சம்திங் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று துணிந்து மக்கள் சொல்லும் ஒரு நாட்டில் அப்படி காவல்துறை செயல்படும் ஒருநாட்டில் சட்டத்தை அமுல்படுத்துவது மிக கஷ்டம்.
இலங்கை போன்ற சிறிய நாடுகளில் மக்கள் சட்டத்தை மதிக்கிறார்கள். கண்டிப்பும் இருக்கிறது பயமும் இருக்கிறது. சிலவேளைகளில் இப்படி லஞ்சமும் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் சட்டத்தை மதிக்கிறார்கள். முதல்வர்கள் அமைச்சர்களே சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து தப்பித்துக் கொள்ள நினைக்கும்போது சாமானியர்கள் என்ன செய்வார். மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி..
என்றாலும், நல்லது நடக்க நமதூர் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள். ஏனெனில் நாம் சட்டத்தை மதிப்பவர்கள் என்பது நமதூருக்கு அருகில் உள்ள காவல் துறைக்கு நன்கு தெரியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross