அன்பு தம்பி மட்டுமல்ல தங்கதம்பியும் கூட!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[30 June 2015] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 41189
அன்புத்தம்பி முஷ்தாகே,புனித ரமலான் மாதத்தில் மிகப்பெரிய வார்த்தைகள் எல்லாம் பிரவேசிக்காதே! நீ உதிர்த்த இந்த வார்த்தைதான் என் மனதை வேதனை படுத்துகிறது!
உன் பாலப்பருவத்திலிருந்து என் கண்முன்னே வளர்ந்த என் அன்பிற்குறிய தம்பி அல்லவா நீ! எத்தனை இடத்தில் என்னை சிலாகித்து பேசி இருக்கிறாய், புகழ்ந்திருக்கிறாய் அதற்கு நான் தகுததி இல்லாத வேலையிலும் கூட!
மார்க்க கொள்கை அணுகுமுறையில் கருத்து முரண்படும் வேலையிலும்கூட அதை மிக மென்மையாக கையாளும் உன் கண்ணிய குணத்தைக்கண்டு மெய்சிலிர்த்து இருக்கிறேன் மிகுதியான வேலையில்!
சுருங்கசொல்லின்,ஏற்றிவிட்டவர்கள் எட்டி உதைக்கும் இக்காலகட்டத்தில் வளர்த்த கடா மார்பை கிழிக்கும் மிக மோசமான இந்த நன்றிகெட்ட உலகத்தில் என் கூடப்பிறந்த தம்பியாக நீ இருந்திருக்க மாட்டாயா? என்று ஏங்கிய காலம் அதிகம்,அதிகம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross