Re posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[30 June 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41191
"தலைகவசம் உயிர் கவசம்" என்ற சொல் மிக பொருத்தமான சொல்லாகும்!.அந்த கவசம் போடாமல் தலையில் அடிபட்டு மாண்ட உயிர்கள் தான் எத்தனை,எத்தனை.இதை எதற்காக சொல்கிறார்கள் என்று ஒருகணம் சிந்தித்தால்,அதன் பயனை அறிந்துணர்ந்து அதை பின்பற்றுவார்கள்.அதை அணிவதால் ஏற்படும் சின்னஞ்சிறு சிரமங்களை புறம் தள்ளிவிட்டு நமதுயிர் காக்க நமதரசு நமக்களித்த பாதுகாப்பு உத்தரவு என்று எண்ணினால் எல்லோரும் இந்த ஆணையை ஆமோதிப்பார்கள்!
இந்த தலை கவசம் வாகன ஓட்டிகளுக்கு மட்டும்தான் உதவுகிறது என்ற எண்ணோட்டம் கிட்டத்தட்ட நம் எல்லோர்களின் நிலைப்பாடாகும்.சற்று உண்ணிப்பாக கவனிப்போமேயானால் நாம் மேற்கொள்ளும் பெரும்பாலான வேலைகளுக்கு பாதுகாப்பளிக்கும் ஒரு கருவிதான் இந்த தலைகவசம்.உதாரணங்களாக கட்டிடவேலைகள் முதல் உயரத்தில் பார்க்கும் வேலைகளான மின்சார பழுதுபார்க்கும் வேலை,வர்ணம் பூசும் வேலை,மரக்கிளைகளை வெட்டுதல், பனை,தென்னை மரத்தில் ஏறும் வேலை போன்றவைகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் கட்டாயம் தலை கவசம் அணியவேண்டும். இதையும் பாதுகாப்பு கருதி அரசு சட்டமாக்கினால் மிக நன்றாக இருக்கும்!
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் பரிமார் தெருவில் ஒரு வீட்டில் பூச்சுவேலை செய்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி சுமார் எட்டு அடி உயரம்கூட இருக்காது அதிலிருந்து விழுந்து மண்டையில் அடிபட்டு மரணம் அடைந்தார்..தலையை தவிர அவர் உடலில் வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது!
ஆக,நம் உயிர் பாதுகாப்பு கருதி அரசாங்கம் போடும் சட்டங்களை துருவி துருவி ஆராய்வதிலிருந்து அகன்று ரிஷி மூலம், நதிமூலம் பார்க்காமல் அனைவர்களும் ஒத்துழைப்பது நமது கடமையாகும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
(Noordeen Doctor you too )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross