உங்க வாப்பா எனக்கு கூட்டாளி, மச்சான் மச்சினபுள்ள உறவும் கூட. கண்டியிலே அவர் பணக்கார பள்ளிக் கூடம். நான் ஏழை பள்ளிக் கூடம் ஆனால் இங்க்லீஷ் எல்லாம் ஒண்ணுதான். அங்கேயும் உம்மாக்கு மதர் னுதான் சொல்லிக் கொடுப்பாங்க எங்களுக்கும் மதர்னுதான் சொல்லிக் கொடுப்பாங்க இருந்தாலும் உங்க வாப்பாவுக்கு மவுசு கூடத்தான், பணம் பவுசு உள்ள ஆளு. அந்த காலத்திலேயே கூடு கொடி எல்லாம் எதிர்த்து தைரியமா களம் இறங்கி கலக்குவாரு, இப்போ அதெல்லாம் நீ பேசுனா முதுகுலே டின்னை கட்டிக்கிட்டு ஓடனும்..
சரி விஷயத்துக்கு வாறன். உங்க வாப்பா செயின் ஸ்மோகர். மச்சான் இப்படி ஊதி தள்ளுறியலே ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணுரியளே என்று கேப்பேன். மச்சின புள்ளை நீ சொல்றது சரிதான். இந்த சிகரெட்டை சத்தியமா இனி குடிக்கமாட்டேன் என்பார் அதை ஊதி தள்ளிட்டு தூர எறிவார். புதுசா ஒன்னு பத்துவார்.. என்னங்க சத்தியம் பண்ணுனிங்க...அடே அது அந்த சிகரெட். அதை இனி சத்தியமா தொடமாட்டேன். இது வேறே...பேச்சிலேயே மடக்கி விடுவார்.
எங்க வாப்பா மக்கி ஆலிம்சா என்றால் இலங்கையிலே பட்டி தொட்டி எல்லாம் தெரியும். அவங்களுக்கு இரவு சாப்பாடு என்ன தெரியுமா ஒரு NAVY CUT WILLS சிகரெட்தான்.உயர்ந்த ரகம். ஊதி ஊதி தள்ளுவார்கள். டின் டின்னாகதான் அந்த சிகரெட் வரும். ஹஜ்ஜுக்கு போகும்போது சிகரெட் குடிக்கிறதை நிர்ப்பட்டுனாங்க. அங்கே போனபிறகு யாரோ ஒரு புண்ணியவான்... ஆலிம்சா இந்த சிகரெட்டை குடித்து பாருங்க, இது STATE EXPRESS உங்க ஊர்லேல்லாம் கிடைக்காது.... அப்படியா தாங்க பாப்போம். ஆஹா இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் இப்படித்தான் அந்த சிகரெட் பெட்டியில் போட்டிருக்கும். அல்லாஹ்வின் அன்பையும் பெற்று நபியின் நல்லாசியையும் பெற்று கையேடு நண்பரின் STATE EXPRESS சிகரெட்டையும் பெற்று சுகமாக ஊர் வந்தார்கள். அதன் பிறகு ஒரு நோம்பு நாளில் அதை நிர்ப்பாட்டினார்கள். வாழ்வின் இறுதிவரை சிகரெட்டை தொடவில்லை.
ஆனால் அவர்களின் தொண்டைக் குழியை அந்த சிகரெட் பதம் பார்த்தது. இதயத்தை ஓட்டை ஆக்கியது எப்போதும் இருமல் பேசினாலும் ஓதினாலும் தொழுதாலும் அது தொடர்ந்து கொண்டே இருந்தது அவர்கள் வாழ்க்கையின் இறுதி நாட்கள் அந்த ஷைத்தான் கொடுத்த நோயுடன்தான் முடிந்தது. அவங்க நிறைய சிகரெட் குடித்து முடித்தாலே நாங்க அண்ணன் தம்பி யாரும் அதை தொடல்லெ... அல்லாஹ் காப்பாத்தினான். யாரும் ஓசி சிகரெட் இப்போது தருவதும் இல்லை. அதற்கு எங்களிடம் பணமும் இல்ல.
இன்னொன்று தெரியுமா ஒரு ஆலிம்சா பயான் செய்தார்...''சொர்க்கத்தில் நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்கும்''...''அப்படியா மிக்க சந்தோஷம். நான் அடிக்கடி சிகரெட் குடிப்பேன். சொர்க்கத்தில் சிகரெட் கிடைக்குமா?...நல்ல கேள்வி இப்போது இப்படித்தானே இஸ்லாமிய கேள்வி பதில்கள் இருக்கின்றன. சஹர் நேர ஒளி பரப்பும் இதைத்தானே ஊக்குவிக்கிறது... ஆலிம்சா இப்போ பதில் சொன்னார்...''ஒ கிடைக்குமே.. ஆனால் அந்த சிகரெட்டை பத்த வைக்க நெருப்பு வேணுமே.. அதற்கு நீங்க நரகத்துக்குதான் போகணும்... போவீர்களா''... மூச்சு பேச்சு இல்லை.
மருமகன் சாலிஹ் அவர்களின் இந்த கட்டுரை நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும், படிப்பவர்கள் ஆரம்பத்திலிருந்து அணுவணுவாக படித்து பாருங்கள். எல்லோருக்கும் நல்ல படிப்பினை பல கோணத்திலிருந்து பேசுகிறார். வாப்பவுடைய குசும்பும் இருக்கிறது.
இப்படி கட்டுரை எழுத ஒரு துணிச்சலும் வேண்டும். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross