Re:...அதிசயம் ஆனால் உண்மை posted bymackie noohuthambi (kayalpatnam)[09 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41266
மின் விநியோகக் கம்பி வடம் அறுந்து விழுந்ததால் நகரின் தென்பகுதியில் ஏற்பட்ட மின்தடை அதுவும் நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தை மிக போர்க்கால அடிப்படையில் கையாண்டு மின்வாரிய ஊழியர்கள் நமது நகரமன்ற உறுப்பினர்கள் அதிரடியாக களம் இறங்கி சரி செய்ததை அதிசயமாக நினைக்க தோன்றுகிறது ஆனாலும் இந்த உண்மை புனித ரமலானில் சஹர் வேளையில் இறைவனின் சகீனத் என்ற மன அமைதியையும் இறங்கும் நேரமாகவும் நாம் கேட்கக் கூடிய பிரார்த்தனைகள் உடனடியாக ஒப்புக் கொள்ளப் படக் கூடிய நேரமாகவும் அமைந்திருந்ததால் அல்லாஹ் இவர்களின் உள்ளங்களில் நல் எண்ணத்தை கொடுத்து நிலைமையை சீர் செய்ய உதவி செய்திருக்கிறான். இந்த துரித நடவடிக்கையில் ஈடுபட்ட எல்லா ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
இதே போல் ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் நமது நகர்மன்ற உறுப்பினர்கள் தோள் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்து ஊர் நன்மைக்காக பாடுபடுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
நாளை 10ம் திகதி மின்தடை நாள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தையும் இறைவனுக்காக பொறுத்துக் கொண்டு சுமார் 14 மணி நேரங்கள் பசித்திருந்து தாகித்திருந்து இரவில் கண்விழித்து பகலை இரவாக ஆக்கி சற்று ஓய்வெடுக்கும் தாய்மார்களுக்கும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த மின்தடை பெரிய அவஸ்தை தரும் என்பதை மின்வாரியம் உணர்ந்து, இந்த மின்தடை நாளை 19-20ம் திகதிகளுக்கு பின்போடு மாறு மின்வாரிய அதிகாரிகளை மெத்தப் பணிவோடு இந்த இணையத்தளம் மூலம் வேண்டிக் கொள்கிறோம். இதற்கான நற்கூலியை இறைவன் உங்கள் எல்லோருக்கும் தருவான். மனித நேய அடிப்படையில் இதை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த கருத்தை வலியுறுத்தி நமது நகர் மன்ற உறுப்பினர்கள் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை அணுகி ஆவன செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம். எல்லோருக்கும் இனிய லைலதுல் கதர் இரவில் பிந்திய பத்து நாட்களிலும் பெருநாள் இரவிலும் இந்த மின்தடை இல்லாமல் நல் அமல்கள் செய்வதற்கு மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் இஸ்லாமிய சமுதாயத்துக்கு உதவிகள் புரிந்து அவர்களின் உள்ளங்களை குளிர செய்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross