செய்தி: ரமழான் 1436: மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு & குடும்ப சங்கமம் நிகழ்ச்சி! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இதயம் இனிக்கிறது உள்ளம் கனக்கிறது posted bymackie noohuthambi (kayalpatnam)[10 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41281
மருமகன் ஷமீமுல் இஸ்லாம் கருத்துக்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது ஆனால் உள்ளம் கனக்கிறது. எல்லோரும் ஒற்றுமை ஒற்றுமை என்றுதான் பேசுகிறோம். ஆனால் புனித ரமாலனில் வரும் லைலதுல் கதர் 3 நாட்கள் அதை தொடர்ந்து வரும் பெருநாட்கள் மூன்று.
ஒரு காலத்தில் சொன்னோம் இஸ்லாத்தில் ஆண்டி அரசன் என்ற பேதம் இல்லை எல்லோரும் ஒரே அணியில் நின்று தொழுகிறோம். சஜ்தா செய்கிறோம் என்று ஆனால் இன்று நடைமுறையில் அது காணாமல் போய் விட்டது. சாதாரண தொப்பி போடுவது முதல் மண்ணறையில் வைக்கும் முறை வரை நம்மில் வேறுபாடு இவை எங்கே இருந்து முளைத்தன.
இரண்டு ஆடுகள் ஒரு பாலத்தில் எதிரெதிராய் நிற்கின்றன. கீழே ஆர்பரித்து செல்லும் ஆறு ஓடுகிறது. ஒரு ஆடை இன்னொரு ஆடு கடந்து அந்த பக்கம் செல்ல வேண்டும். ஒரு ஆடு படுத்துக் கொண்டு மற்ற ஆட்டுக்கு வழி கொடுக்கிறது.இலகுவாக கடந்து செல்கின்றன. இந்த ஐந்தறிவு மிருகத்துக்கு உள்ள விட்டுக் கொடுக்கும் தன்மை மனிதர்களில் இருசாராருக்குமே இல்லை. நான் சொல்வதே சரி என்று இருவரும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு குர் ஆன் ஹதீதுகளில் இருந்து ஆதாரம் சொல்கிறார்கள்.
சாதி வெறி நமது மாநிலத்தில் தலை தூக்கி நிற்கிறது ஒரு சாதியில் உள்ள பெண்ணை இன்னொரு சாதி ஆண் மணக்கவும் முடியவில்லை மனத்தால் நினைக்கவும் முடியவில்லை. இஸ்லாமிய திருமணத்துக்கு வாருங்கள். பெண் மாப்பிள்ளை என்று பேசும்போதே நீ தௌஹீத் ஜமாத்தா சுன்னத் ஜமாத்தா என்று கேட்டுத்தான் பேச்சே ஆரம்பமாகிறது நமது ஊரில். இதுதான் இன்றைய நிதர்சன உண்மை. சுன்னத் ஜமாஅத் தௌஹீத் ஜமாஅத் தப்லீக் ஜமாஅத் என்று மூன்று கோஷ்டியாக தான் மார்க்க அமல்கள் பிரிக்கப்பட்டு நடை முறையில் இருந்து வருகிறது. எனவே நீங்கள் சொல்லும் ஒற்றுமை வெறும் கானல் நீர்தான்.
ஹிதாயத்து அது ஒரு வழிப்பாதையில் கிடைக்காது. விட்டுக் கொடுப்பது இணைந்து செல்வது. நாம் சொல்வது சத்தியமாக இருந்தாலும் அதில் குழப்பம் ஏற்படும் என்றால் அந்த சொல்லை சொல்லாமல் இருப்பது எல்லாம் இஸ்லாத்தில் உள்ள முக்கிய அம்சங்கள். இதை இரு சாராரும் உணராமல் புரியாமல் அவரவர் செய்வதே சரி என்று வாதிட்டுக் கொண்டிருப்பதால் யுக முடிவு காலம் வரை இந்த பிரிவினை தொடரவே செய்யும். வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross