செய்தி: இஃப்தாருடன் நடந்தேறியது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு! ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1,35,000 நிதி சேகரிப்பு!! இக்ராஃ கல்வி உதவித்தொகைக்காக 20 அனுசரணையாளர்கள் இணைவு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தம்பி வா தலைமை ஏற்க வா... posted bymackie noohuthambi (kayalpatnam)[13 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41332
பேரறிஞர் அண்ணா அவர்கள் ''தம்பி வா! தலைமை ஏற்க வா!!'' என்று நாவலர் அவர்களை அழைத்த காலம் ஞாபகத்துக்கு வருகிறது.
கத்தார் காயல் நல மன்றம் இக்ராவின் தலைமை பொறுப்பை ஏற்றவுடன் அதன் தலைவரின் முழக்கம் இங்குள்ள வெப்பக் காற்றையும் குளிர செய்து விடுகிறது.
மிக நேர்த்தியாக செயல்படுத்த மிக அருமையான திட்டங்கள் உறுப்பினர்களின் ஆதரவு நம்மை சிலிர்க்க வைக்கிறது. உறவுக்கு கை கொடுக்கும் கரங்கள் இணைந்து ஒலி எழுப்புவது நமக்கு கேட்கிறது. அதே நேரம் உரிமைக்கு குரல் கொடுக்கும் குரலும் சேர்ந்து ஒலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஓசை இல்லாமல் எல்லாமே விதி 110 இன் கீழ் நமது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறும் தீர்மானங்கள் போல் இந்த தீர்மானங்களும் ஆகி விடுமோ என்ற பயமும் இருக்கிறது.
ஆங்கிலத்திலே watchdog என்று ஒரு வாசகம் உண்டு உங்களுக்கு தெரிந்த ஒன்றுதான். இத்தனை லட்சங்களை உங்கள் வியர்வை துளிகளிளிருந்து அள்ளிக் கொடுக்கும் நீங்கள் - உங்கள் கரங்களை முத்தமிட வேண்டும் போல் இருக்கிறது. இத்தனை லட்சங்களும் எந்த லட்சியத்துக்காக செலவழிக்கப் படுகிறதோ அந்த லட்சியப் பாதையில் அந்த உதவிகளை பெறுகிறவர்கள் செலவளிக்கிறார்களா அல்லது ஏதோ விலையில்லா அரிசி, தொலைக் காட்சி பெட்டி மிக்சி கிரைண்டர் ஆடு மாடு கிடைப்பது போல் இதுவும் ஆகிவிடுகிறதா என்று கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழுவும் அமைக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன். அந்த குழுவின் மறுபெயர்தான் நான் மேலே சொல்லியுள்ள WATCHDOG COMMITTEE
சிறப்பான இந்த அமைப்பின் அறிக்கைகளால் நம் இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது. கரங்கள் உங்களுக்காக இறைவன் பக்கம் உயர்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் எல்லோருக்கும் நீடித்த ஆயுளையும் குன்றாத செல்வதையும் நோயற்ற வாழ்வையும் தந்து பொது சேவைகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ள அருள்புரிவானாக.
மாற்றி யோசிக்கும் இந்த புதிய தலைமுறைக்கு இளைய தலைமுறைக்கு எனது வாழ்த்துக்கள்.
HE ALONE LIVES WHO LIVES FOR OTHERS.
OTHERS ARE MORE DEAD THAN ALIVE.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross