செய்தி: இஃப்தாருடன் நடந்தேறியது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு! ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1,35,000 நிதி சேகரிப்பு!! இக்ராஃ கல்வி உதவித்தொகைக்காக 20 அனுசரணையாளர்கள் இணைவு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[14 July 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41335
நடைபெற்று முடிந்த கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு விற்கு வாழ்த்துக்கள்..
மௌசை உருட்ட..... உருட்ட..... செய்திகளும் புகைப்படங்களும் வந்துக்கொண்டே இருக்கின்றது. சந்தோசம்.
உங்களுடைய ஒவ்வொரு நிகழ்வுக்கும் கூடுதல் பாராட்டுக்கள்.
கத்தார் மன்ற செய்தி என்றால் நான் முதலில் தேடுவது சோனா முஹ்யித்தீன் காக்காவை தான். பல காரணங்கள். அவரின் பண்பு, மக்கள் நலனில் ஈடுபாடு, சவுதி அரேபியாவை விட்டு சென்றாலும் தம்மாம் தாய் மன்றத்தை மறவாமல், அதனுடன் தன்னை இனைத்துக்கொண்டு பணிபுரியும் நல்ல உள்ளம் போன்ற பல காரணங்கள்.
இக்ராவின் புதிய தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள சகோதரர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்களின் துடிப்பான சேவை, அவர் தன் பொறுப்பு காலத்தில் செய்ய வேண்டிய பல நற்செயல்களை பட்டியலிட்டு செயல் படுத்த ஆரம்பித்து உள்ளார். வாழ்த்துக்கள்.
ஆனால், தலைவர் பதவி என்பது ஒரு வருடம் மட்டும் தான். இக்ராவின் செயல்பாடுகளைப் பற்றி அறிவதற்குள் 3 மாதங்கள் ஓடி விடும், அதன் செயல்பாட்டுக்குள் நுழைவதற்கும் பாதி காலம் முடிந்து விடும். அப்புறம் செயல் திட்டம், அது இது என்று செயல் பட ஆரம்பிக்க, பதவி காலம் முடிந்து விடும்.
ஆக , இக்ராவின் தலைவர் பதவி காலத்தை 2 அல்லது 3 வருடமாக கூட்டுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross