மரியாதைக்குரிய அப்துல் காதிர் காக்கா [மிஸ்பாஹி ஆலிம் சகோதரர்], பிக்தால் காக்கா, அத்தாவுல்லாஹ் மச்சான், சகோதரர்கள் நளீர், மஹ்மூது நெய்னா, ஜாஹிர் ஹுஸைன் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களையும் ஒருமித்து கண்டதில் மிக்க மகிழ்ச்சி. கண் குளிர்ச்சியும் தான்!
இலங்கை தாருல் ஈமானின் நளீமிகளாகட்டும்; JIH ஆர்வமிகுந்த நெறி மிக்க தன்னார்வ நற்பணியாளர்களாகட்டும்; நமது காயலர்களாகட்டும்; கடந்து சென்ற காலங்களில், பயணித்த வழித்தடங்களில் பஹ்ரைனில் வாழ்ந்த காலம் உளப்பூர்வமாகவே மகிழ்வூட்டியவை. அகமும், புறமும் புத்துணர்வூட்டப் பட்ட தருணங்கள் தாம் அவை.
உலகளாவிய காயல் நலமன்றங்களின் எண்ணற்ற சமுதாயச் சேவைத் திட்டங்களின் வித்துக்கள் இங்கு தான் விதைக்கப் பட்டனவோ? என்று வியக்கும் அளவுக்கு, பற்பல சமூக சேவைகளுக்கான திட்டங்கள் இந்த முத்து நகரிலிருந்து தான் துளிர்த்தன என்பதை பல்வேறு நகரங்களின் காயல் நலமன்றப் பணியில் பங்கு பெற்றும், அவதானித்தும் வரும் என் போன்றோரால் உறுதியாக சொல்ல இயலும்.
குறிப்பாக, நமதூரில் இண்டெர்வியூ நடத்தி பஹ்ரைன் கம்பெனிகளின் அலுவலகப் பணியாளர்களைத் தெரிவு செய்த வேலைவாய்ப்புச் சேவை, UPSC, TNPSC, சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்காக ஆர்வமுள்ள நமதூர் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் போட்டித் தேர்வு பயிற்சிக்கால செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்வது, ஹாபிழ்களை, முஅத்தின்களை,, ஆலிம்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களுக்கான சேவைகள் என்ற அதன் எண்ணற்றத் திட்டங்களில் ஒரு சிலவற்றை செயலாக்கம் செய்வதில் மற்ற மன்றங்கள் முந்திக் கொண்டாலும், இனிவரும் காலங்களில் தொய்வின்றி தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
முதன் முதலாக ஆண்டு மலர் வெளியிட்ட முன்னோடி அமைப்பு BAKWA தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross