பஹ்ரைன் காயல் நல மன்றம் சார்பில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, அந்நாட்டின் மனாமா நகரிலுள்ள ஃபுட் சிட்டி ரெஸ்டாரெண்ட்டில், 10.07.2015 வெள்ளிக்கிழமையன்று 18.25 மணியளவில் நடைபெற்றது.
மன்றத்தின் அழைப்பையேற்று, அந்நாட்டில் வசிக்கும் காயலர்கள் தம் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறி கஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள், பழ வகைகள் பரிமாறப்பட்டன.
பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியை எம்.டபிள்யு.அத்தாஉல்லாஹ் நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் ராவன்னா ரிழ்வான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முஹ்யித்தீன் பிக்தால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய எஸ்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமையுரையாற்றினார்.
மன்றப் பொருளாளர் வி.எஸ்.எஸ்.ஜாஹிர் ஹுஸைன் - மன்றத்தின் நிதிநிலை அறிக்கையையும், கடந்த கால செயல்பாடுகளையும் விளக்கிப் பேசினார்.
வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் - மன்றத் தலைவர் மஹ்மூத் நெய்னா உரையாற்றினார். எம்.எச்.நளீர் அஹ்மத் நன்றி கூறினார். அனைவருக்கும் இரவுணவு பரிமாறப்பட்டது. துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. குழுப்படம் பதிவு செய்யப்பட்ட பின்னர், அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
தகவல் & படங்கள்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
வேனா ஜாஹிர் ஹுஸைன்
M.W.அத்தாஉல்லாஹ்
பஹ்ரைன் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |