சிங்கப்பூரில் பெடூக் பகுதியில், காயலர்கள் ஏற்பாட்டில் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு ரமழான் மாதம் முழுக்க இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிங்கை கா.ந.மன்றத்தின் ஆலோசகரும், சமூக ஆர்வலருமான பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில், அன்றாடம் 21.00 மணியளவில், இஷா - தராவீஹ் தொழுகைகள் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினத்தை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஹாஃபிழ்கள் ஒருங்கிணைந்து தொழுகைகளை வழிநடத்தி வருகின்றனர்.
சிங்கையில் பணியாற்றி வரும் இளவயதுடைய ஹாஃபிழ்கள் தமது திருமறை குர்ஆன் மனனத்தை வலிமைப்படுத்திட, ஓர் அரிய வாய்ப்பாகக் கருதி ஆர்வத்துடன் இதில் பங்கெடுத்து வருகின்றனர். பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்படுள்ளது. நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் தேனீர் வழங்கி உபசரிக்கப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
சிங்கப்பூரிலிருந்து...
ஹிஜாஸ் மைந்தன்
ஹிஜ்ரீ 1434 ரமழான் மாதத்தில், சிங்கை காயலர்களால் நடத்தப்பட்ட ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |