நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை சார்பில், நகரிலுள்ள ஏழை-எளிய மக்களுக்கு அரிசி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஆண்டுதோறும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, நகரிலுள்ள ஏழை - எளிய பொதுமக்களுக்கு அரிசி அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இம்மாதம் 13ஆம் நாள் திங்கட்கிழமை 17.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலக கட்டிடமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸில் வளாகத்தில், ஏழை மக்களுக்கு அரிசி அன்பளிப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கே.எம்.என்.முஹம்மத் உமர் துஆ இறைஞ்சினார். கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, அரிசி அன்பளிப்பைத் துவக்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஆர்.பீ.ஷம்சுத்தீன், நகர நிர்வாகிகளான அரபி முஹம்மத் முஹ்யித்தீன், மேஸ்திரி ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோர் ஏழைக் குடும்பத்தினருக்கு அரிசிப் பொதியை வழங்கினர்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், இளைஞரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான எம்.இசட்.சித்தீக் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது, காயல்பட்டினத்தைச் சேர்ந்த 1500 ஏழை பொதுமக்களுக்கு தலா ஒன்றரை கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நகர நிர்வாகிகள் ஒருங்கிணைத்து செய்திருந்தனர்.
கள உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ரமழானை முன்னிட்டு அரிசி அன்பளிப்பு செய்யப்பட்ட தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |