காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், ஆண்டுதோறும் ரமழான் 27ஆம் நாளன்று நள்ளிரவில் திக்ர் மஜ்லிஸ் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், இவ்வாண்டும் ரமழான் 27ஆம் நாளான ஜூலை 14 நள்ளிரவு 12.00 மணியளவில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ், இளைஞர் ஐக்கிய முன்னணி வளாகத்தில், ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்ற, அவரைத் தொடர்ந்து - இஸ்லாமிய அழைப்பாளரும், ஐக்கிய சமாதானப் பேரவையின் நெறியாளர்களுள் ஒருவருமான மவ்லவீ காஞ்சி ஆர்.அப்துர்ரஊஃப் பாக்கவீ சிறப்புரையாற்றினார்.
இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூறினார். குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ துஆ இறைஞ்சினார். ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் உக்காஷா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
முன்னதாக, மாணவர் என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி, திக்ர் மஜ்லிஸ் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளனைத்திலும், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இளைஞர் ஐக்கிய முன்னணியின் மூத்த நிர்வாகி எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டி.எம்., எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில் அங்கத்தினர் செய்திருந்தனர்.
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ரமழான் 27ஆம் நாளன்று நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இளைஞர் ஐக்கிய முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |