சந்திர ஓட்டக் கணக்கீட்டின் அடிப்படையில், ஜூலை 17 வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் கிளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினம் கடற்கரையில், நாளை காலை 07.30 மணிக்கு நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்படவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வருமாறு:-
தகவல் & படம்:
M.N.அஹ்மத் ஸாஹிப்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ஹிஜ்ரீ கமிட்டியின் நோன்புப் பெருநாள் அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[16 July 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41364
கிருபையுள்ள வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து, எல்லா நல்ல அமல்களையும் அங்கீகரித்து, வாழ்வில் எல்லா வளங்களையும் குறைவின்றி வழங்க, இந்த புனித நாளில் பிராத்திக்கின்றேன்.
3. Re:...ஒன்றுபடுவோம் ! ஒரே (பெரு)நாளில் ஒன்று கூடுவோம்!! posted byGEM Theebi (Kayalpatnam)[17 July 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 41368
பிறை கண்டு (ரமழான்) நோன்பு வைக்க வேண்டும். இது கடமை. ஆனால் பெருநாள் கொண்டாடுவது கடமை இல்லை. சுன்னத்துதான்.
பெருசாரார் (நம் ஊரில் 80%) கடமையான (ரமழான்) நோன்பினை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும்போது, (குறைந்தபட்சம்) ரமழானை சங்கைப்படுத்தும் நோக்கத்துடனாவது, இருசாரார் இன்று பெருநாள் கொண்டாடாமல் (ஈகோவை விட்டுவிட்டு, ஊரின் ஒற்றுமையைப் பேணி) எல்லோரும் ஒரே நாளில் ஒன்றிணைந்து பெருநாள் கொண்டாடலாமே.
அதனால் சகோதரத்துவம் மலரட்டுமே.
இது, ஜும்ஆஹ் பயானில் ஒரு மார்க்க அறிஞர் இன்று எடுத்தியம்பிய அறி(ற)வுரை.
மிகச் சாதாரணமான அதிலும் சந்தோஷ முகங்களோடு ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் பெருநாளில்…
” நாங்க லேட்டா கொண்டாடினாலும், லேட்டஸ்ட்டா கொண்டாடுவமுள்ளே!” என்று அங்கலாய்த்துக்கொள்ளும் நெருக்கமான உறவுகள்.
இப்படியே சில ஆண்டுகளாகத் தொடரும் நிகழ்வுகள்.
இவை… வேதனையின் விளிம்புகள்.
பழகிப்போன சடங்குகள் – ஆனால்
நாமெல்லோரும் பாசப்(?) பறவைகள்.
“உனக்கு நான் ஆடை, எனக்கு நீ ஆடை” என்றோதிக் கரம்பிடித்த… கண் நிறைந்த(?) கணவன் இன்று பெருநாள் கொண்டாட, கல்புக்குள் நிறைந்த (?) மனைவியோ நாளைதான் பெருநாள் கொண்டாடுவோம் என்ற முடிவுடன் இன்று நோன்பு வைத்திருக்க…
நமக்குள்… ஒரே குடும்பக் கூட்டுக்குள்
ஏன் இத்தனை பிணக்குகள். – இதில்
எங்கிருந்து அரும்பும் சந்தோஷ மொட்டுக்கள்.
சகோதர நெஞ்சங்களே!
நோன்பு வைக்கும் நாளை முன்/பின் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால், பெருநாள் கொண்டாட… கடமையான நோன்பு வைத்திருப்பவர்களின் நோன்பை கண்ணியப்படுத்தும் முகமாக …
நம் இன பந்துக்களிடையே ஒருமித்த சந்தோசத்தை எல்லோரும் ஒரே நாளில் அனுபவித்து மகிழ… அல்லாஹ்வுக்காக… ஒரே ஒருநாள் விட்டுக்கொடுங்கள்.
பிரிவு பட்டு … பிளவு பட்டு … சில்லுத் தேங்காயாக சிதறி விடாமல்…
எல்லோரும் ஒரே நாளில் ஒன்றுபட்டுக் கொண்டாடுவோம்.
நம்மைப் படைத்துப் பரிபாலித்துக் காத்தருளும் மாபெரும் கருணையாளன் அல்லாஹ்வைப் போற்றுவோம். இவ்வுலகை உய்விக்க வந்த உத்தமத் திருத்தூதர் வழி என்றென்றும் … தொய்வின்றித் தொடருவோம்.
என் அன்புச் சொந்தங்கள்… பந்தங்கள்… நட்பு வட்டாரங்கள் …
மற்றும் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்
என் நெஞ்சம் நிறைந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross