சிங்கப்பூர் நாட்டில் இன்று (ஜூலை 17 வெள்ளிக்கிழமை) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
அங்குள்ள காயலர்கள், லிட்டில் இன்டியாவிலுள்ள மஸ்ஜித் அப்துல் கஃபூர், பென்கூலன் தெருவிலுள்ள மஸ்ஜித் பென்கூலன், ராஃபள்ஸ் ப்ளேஸிலுள்ள மஸ்ஜித் மவ்லானா முஹம்மத் அலீ, பிடோக்கிலுள்ள மஸ்ஜித் அல்அன்ஸார், சைனா டவுனிலுள்ள மஸ்ஜித் ஜாமிஆ சூலியா உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 08.00 மணி துவங்கி பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
பின்னர் அவர்கள் ஒன்றுகூடி கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்ட காட்சிகள் வருமாறு:-
மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ, ஜாமிஆ சூலியா பள்ளியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ ஆகியோர் இமாம்களாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
சிங்கப்பூரிலிருந்து...
M.M.மொகுதூம் முஹம்மத்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) சிங்கை காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |