குவைத் நாட்டில் இன்று (ஜூலை 17 வெள்ளிக்கிழமை) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
அங்குள்ள காயலர்கள் உள்ளிட்ட தமிழ் முஸ்லிம்கள், குவைத் சிட்டி, மாலியா, ஹஸாவி, ஃபஹாஹீல், மஹ்ஃபூழா உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும், நோன்புப் பெருநாளுக்காக - குவைத்திலுள்ள கைதான் தமிழ் குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரையில் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்றதும், பள்ளி வளாகத்தில் அனைவரும் ஒன்றுகூடி, கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர், காயல்பட்டினம் ஸ்பெஷல் கோழிக்கறி, இடியாப்பம், புரோட்டா, ஜவ்வரிசி, வட்டிலியாப்பம் ஆகிய உணவுப் பதார்த்தங்களுடன் பெருநாள் விருந்து விமரிசையாக நடைபெற்றது.
தகவல் & படங்கள்:
குவைத்திலிருந்து...
L.T.அஹ்மத் முஹ்யித்தீன் |