காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், இன்று (ஜூலை 17 வெள்ளிக்கிழமை) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகத்தின் சார்பில், இன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்தினார்.
பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் (முர்ஷித்), எம்.ஐ.மெஹர் அலீ, அப்பா பள்ளி தலைவர் எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., அல்ஜாமிஉல் அஸ்ஹர் பொருளாளர் எம்.என்.எம்.ஐ.மக்கீ, துணைத்தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களான எஸ்.எம்.அமானுல்லாஹ், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.அப்துல் ஜப்பார், எழுத்தாளர்களான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) தலைவர் எம்.ஏ.புகாரீ (48), ஹிஜ்ரீ கமிட்டி நிர்வாகிகளுள் ஒருவரான எம்.என்.அஹ்மத் ஸாஹிப், உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இத்தொழுகையின்போது, ஏழைகள் துயர் துடைக்கும் ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளைக்காக
ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 83,000 தொகையும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 82,000 தொகையும் என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தொகையும், ஒரு தங்க மோதிரமும் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பிலும், ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பிலும் தனித்தனியே பெருநாள் தொழுகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தபோதிலும், ஒரே நாளில் பெருநாள் அமைந்ததால், ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் தனியாக தொழுகை நடத்தப்படாமல், ஐ.ஐ.எம். சார்பில் நடத்தப்பட்ட தொழுகையிலேயே அவர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
தகவல் உதவி:
M.A.புகாரீ (48)
ஐ.ஐ.எம். சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |