காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வருகிறது ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனமும், அதன் திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவும்.
இந்நிறுவனத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில், இன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்னர் நடைபெற்ற அமர்விற்கு, மத்ரஸா எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, எம்.எல்.ஹஸன் பஸரீ, ‘ஸஃபயர் மெடிக்கல்ஸ்’ செய்யித் அலீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாதன்குளத்தைச் சேர்ந்த தமீம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எஸ்.எம்.ஐ.ஷாஹுல் ஹமீத் என்ற சாவன்னா வரவேற்புரையாற்றினார். முன்னாள் மாணவர்கள் அரபி கீதம் பாடினர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் தலைமையுரையாற்றினார்.
ரமழான் மாதத்தில், இலங்கையில் நடைபெற்ற கியாமுல் லைல் தொழுகையில் திருமறை குர்ஆனின் 30 ஜுஸ்உகளையும் ஒரே தொழுகையில் பாராமல் ஓதி முடித்த முன்னாள் மாணவர் - காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எஸ்.எம்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீக்கு இவ்விழாவில் பாராட்டு தெரிவிக்கும் வகையில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை நெறிப்படுத்திய ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், மத்ரஸாவின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என சுமார் 75 பேர் வரை கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர் ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர், ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
ஹாமிதிய்யாவில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |