காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின் வினியோகக் கம்பிவடங்களுள் ஒன்று, இன்று 23.00 மணியளவில் திடீரென அறுந்து விழுந்தது.
மின் கம்பிவடம் அறுந்து விழுந்ததைக் கண்ணுற்ற சமூக ஆர்வலர்கள் சிலர் சாலையின் இரு புறங்களிலும் இருசக்கர வாகனங்களைக் கொண்டு அடைப்பை ஏற்படுத்தி, அவ்வழியே மக்கள் கடந்து செல்வதைத் தடுத்து, காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்கும் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கு விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள், அப்பகுதியில் மின் வினியோகத்தைத் துண்டித்து, பழுதை சரிசெய்தனர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடைவீதிகளில் மக்கள் போக்குவரத்து அதிகமாக இருந்தபோதிலும், நிகழ்விடத்தில் ஒரு சிலர் மட்டுமே இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
அய்யூப் அரபீ
நகரில் மின் வினியோகக் கம்பிவடம் அறுந்து விழுந்தது தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |