நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களையும் ஒருங்கிணைத்து, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியை நிர்வகித்து வரும் துளிர் அறக்கட்டளையின் சார்பில் பெண்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 11.07.2015 சனிக்கிழமையன்று 17.30 மணியளவில், துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க கவுரவ செயலாளர் அ.வஹீதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். துளிர் பள்ளி மேலாளர் சித்தி ரம்ஸான் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் ஆசிரியை எம்.ஏ.ஜுவைரிய்யா, ‘ரமழானின் சிறப்புகள்’ எனும் தலைப்பிலும், சுமய்யா முஅஸ்கரிய்யா, ‘இஸ்லாமில் சேவையின் பங்கு’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
பின்னர் இஃப்தார் - நோன்பு துறப்பு துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறிகஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள், கடற்பாசி, பழங்கள் பரிமாறப்பட்டன. நிறைவில், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தின் அனைத்து பெண்கள் தைக்காக்களின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) துளிர் பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |