எதிர்வரும் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், குருவித்துறைப்பள்ளி அருகில் வான்கோழி வணிகம் நடைபெற்று வருகிறது. உயிருடன் ஒரு கிலோ 220 ரூபாய் என்று விலை கூறப்பட்டு, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
இக்கோழிகள் குறித்து உரிமையாளர்களிடம் வினவுகையில், ப்ராய்லர் வளர்ப்பில் உள்ளவை அல்ல என்றும், பண்ணைகளில் மொத்தமாக வளர்க்கப்படுபவை என்றும் கூறினர். |