காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், காமராசரின் 113ஆவது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இவ்விழாவிற்கு, தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி வைத்து, தலைமையுரையாற்றினார்.
தமிழாசிரியர் பீ.ஏ.ஷேக் பீர் முஹம்மத் காமில் - காமராசர் கல்விக்கு ஆற்றிய பணிகள் குறித்தும், முதுகலை வரலாற்று ஆசிரியர் அஹ்மத் ஏ.ஜெ.முஸ்தஃபா - காமராசரின் பொற்கால ஆட்சி எனும் தலைப்பிலும் பேசினர்.
காமராஜரின் சேவைகளை நினைவுகூர்ந்து பள்ளி மாணவர்களும் உரையாற்றினர். சிறப்பாகப் பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதுகலை பொருளியல் ஆசிரியர் அப்துர்ரஊஃப் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. பள்ளியின் சத்துணவு மாணவர்களுக்கு, சத்துணவுடன் சர்க்கரைப் பொங்கலும் வழங்கப்பட்டது.
தகவல்:
ஆசிரியர் S.B.B.புகாரீ
2012ஆம் ஆண்டில், காமராசர் பிறந்த நாளன்று எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட கல்வி வளர்ச்சி நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |