காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் கடைசி பத்து நாட்களில் ஏதேனும் ஒரு நாளின் பின்னிரவில் கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டின் கியாமுல் லைல் தொழுகை இம்மாதம் 14ஆம் நாள் பின்னிரவு (ரமழான் 26ஆம் நாள் இரவு) 22.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள - அப்பள்ளியின் முன்னாள் - இந்நாள் ஹாஃபிழ் மாணவர்கள் அதில் கலந்துகொண்டு தொழுகையை வழிநடத்தினர்.
பின்னர், தொழுகையை வழிநடத்திய ஹாஃபிழ்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி, பள்ளியின் நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான், முதல்வர் ஸ்டீஃபன், முன்னாள் மாணவர் ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ மாணவர்களைப் பாராட்டி, அறிவுரை வழங்கினார்.
பின்னர், கியாமுல் லைல் சிறப்புத் தொழுகையை வழிநடத்திய ஹாஃபிழ்களுக்கு பணமுடிப்பு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. மேடையில் வீற்றிருந்தோர் வழங்க, ஹாஃபிழ்கள் பெற்றுக்கொண்டனர்.
ஏ.எல்.பஷீருல்லாஹ், ஜவஹர் ஆஸாத் உள்ளிட்டோரங்கிய குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி)
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், ஹிஜ்ரீ 1434ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் நடத்தப்பட்ட கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |