கத்தர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 101 ஏழை மாணவ-மாணவியருக்கு 202 செட் பள்ளிச் சீருடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பள்ளி செல்லும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஏழை மாணவ-மாணவியருக்கு பள்ளிச் சீருடைகளை அன்பளிப்பாக வழங்கி, அவர்களின் பொருளாதார அவதியைப் போக்க வேண்டும் என்று கருதியதன் அடிப்படையில், கத்தர் காயல் நல மன்றம் சார்பில் பள்ளிச் சீருடைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிலும், 06 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த 101 ஏழை மாணவ-மாணவியருக்கு, 1 லட்சத்து 31 ஆயிரம் தொகை மதிப்பில், ஒருவருக்கு 2 செட் பள்ளிச் சீருடைகள் வீதம் - 202 செட் பள்ளிச் சீருடைகள், 21.06.2015 ஞாயிற்றுக்கிழமையன்று, இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிச் சீருடைகள் கோரி விண்ணப்பிக்கும் மாணவ-மாணவியரின் விண்ணப்பங்கள் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் பெறப்பட்டு, பரிசீலனைக்குப் பின் தகுதியுள்ளோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இக்ராஃவிலேயே மாணவ-மாணவியருக்கு தனித்தனி நேரங்களில் அளவு எடுக்கப்பட்டு, பள்ளிச் சீருடைகள் தைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திருந்தார். அதன் பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், துணைச் செயலாளரும் - கத்தர் காயல் நல மன்ற பிரதிநிதியுமான எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் துணைப் பணியாற்றினர்.
மாணவியருக்கான வினியோகத்தை, இக்ராஃ கல்விச் சங்கத்தின் மகளிர் தன்னார்வக் குழுவினர் முன்னின்று சிறப்புற செய்திருந்தனர்.
அனைவருக்கும், கத்தர் காயல் நல மன்றம் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்)
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |