காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவையடுத்து, சதுக்கைத் தெரு துவக்கத்திலேயே அமைந்துள்ளது அஹ்மத் நெய்னார் பள்ளி.
நிர்வாகம்:
ஹாஜி எஸ்.கே.ஜெய்னுல் ஆப்தீன் பள்ளியின் தலைவராக இருந்து, நிர்வாகத்தை வழிநடத்தி வருகிறார்.
இமாம் - பிலால்:
அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ பள்ளியின் இமாமாகவும். ஜெஸ்மின் இஸ்மாஈல் அதன் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகையில் திருமறை குர்ஆன் முழுதும் ஓதி முடிக்கப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எஸ்.ஏ.ஷெய்கு ஹல்ஜீ என்பவரது மகன் ஹாஃபிழ் எஸ்.எச்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா, நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையை வழிநடத்தி வருகின்றனர்.
ரமழான் மாதம் முழுக்க இஷா தொழுகை 20.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.00 மணிக்கும் துவங்கி நடைபெற்று வருகின்றன.
இஃப்தார் ஏற்பாடுகள்:
இப்பள்ளியில் ஆண்டுதோறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. ஊற்றுக்கஞ்சி வினியோகம் கிடையாது. நாள்தோறும் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகளில் 100 முதல் 125 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
நடப்பாண்டு கஞ்சி ஏற்பாடு உள்ளிட்ட ரமழான் சிறப்பேற்பாடுகளை, ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், ஹாஜி என்.எஸ்.அப்துஸ்ஸலாம், ஹாஜி ஊண்டி எஸ்.கே.கிழுறு முஹம்மத் ஆகியோரடங்கிய குழு பொறுப்பேற்று செய்து வருகிறது.
25.06.2015 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-
தகவல் உதவி:
M.A.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (எ) மம்மினாகார்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) அஹ்மத் நெய்னார் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அஹ்மத் நெய்னார் பள்ளியின் வரலாறு அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அஹ்மத் நெய்னார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர பள்ளிகளில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |