காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் சார்பில், 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். குருவித்துறைப் பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், வாவு எஸ்.அப்துல் கஃப்பார் மற்றும் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் எஸ்.எச்.அலீ ஃபஹத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மாணவர் எம்.எஸ்.ஹஸன் அஃப்ரிதீ வழிநடத்தலில், மாணவர்கள் இறைவேண்டற்பா பாடினர். மாணவர்கள் பீ.இசட்.ஏ.முஹம்மத் அலீ, எம்.எல்.முஹம்மத் ஸுஹைல் ஆகியோர் பைத் பாடினர்.
என்.டி.ஷெய்கு மொகுதூம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி (தீனிய்யாத்), ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆகிய கல்விப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து அவர் தனதுரையில் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.
ஹாமிதிய்யா ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ துஆவுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
பின்னர் துவங்கிய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானம், பழ வகைகள் துவக்கமாகப் பரிமாறப்பட்டன.
மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மாணவர் பீ.ஏ.இசட்.ஸாமு ஹஸ்ஸான் அதான் ஒலிக்க, ஹாஃபிழ் அல்தாஃப் அஹ்மத் தொழுகையை வழிநடத்தினார். தொழுகையைத் தொடர்ந்து சிற்றுண்டியுபசரிப்பு நடைபெற்றது. அனைவருக்கும் பிரியாணி கஞ்சி, பனிக்கூழ், சிக்கன் 65, மட்டன் கட்லெட், வடை வகைகள், இஞ்சி கலந்த தேனீர் ஆகியன பரிமாறப்பட்டன.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ, மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் ஃபாஸீ உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ்,
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், என்.எஸ்.நூஹ் ஹமீத், ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி,
நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.), டி.எம்.ரஹ்மத்துல்லாஹ், அரிமா சங்க நகர நிர்வாகி ஏ.கே.பீர் முஹம்மத், ஜெஸ்மின் ஏ.கே.கலீல், உள்ளிட்ட நகரின் பெரும்பாலான ஜமாஅத் நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் இந்நாள் - முன்னாள் மாணவர்களும் என சுமார் 500 பேர் வரை பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, என்.டி.ஷெய்க் மொகுதூம், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர், எஸ்.எம்.எஸ்.நூஹ் தம்பி, ஹாஃபிழ் பரீத் மன்ஸூர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
ஹாமிதிய்யா நிர்வாகத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |