காயல்பட்டினம் - வீரபாண்டியன்பட்டினம் சாலையில், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து எல்லைக்குள் அமைந்துள்ளது காட்டு மகுதூம் பள்ளி. மஹான் ஷஹீத் முத்து மகுதூம் வலிய்யுல்லாஹ் தர்ஹாவும், மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலும் அடுத்தடுத்து அமைந்துள்ளது.
இப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி, 09.07.2015 வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது. காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள், நகரப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய மார்க்க அறிஞரும் - ஆய்வாளருமான காஞ்சி ஆர்.அப்துர்ரஊஃப் பாக்கவீ சிறப்புரையாற்றினார்.
ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ துஆ இறைஞ்சினார்.
பின்னர், இஃப்தார் - நோன்பு துறப்பு துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், வடை வகைகள், குளிர்பானம், கடற்பாசி, பழ வகைகள் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கத்தீப் மஹ்மூத் நெய்னா, சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில், மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ வழிநடத்தலில், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
காட்டு மகுதூம் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடத்தப்பட்ட இஃப்தார் – நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காட்டு மகுதூம் பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காட்டு மகுதூம் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |