காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில், இன்று (ஜூலை 11 சனிக்கிழமை) 18.30 மணியளவில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஈக்கியப்பா தைக்கா மைதானத்தில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ தலைமையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் முத்து ஹாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் துஆ பிரார்த்தனை செய்தார்.
மஃரிப் வேளை வந்ததும், நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், திராட்சைப் பழம், மாதுளம்பழம், கடற்பாசி, குளிர்பானம், கறிகஞ்சி, கட்லெட், வடை வகைகள், பர்கர் ஆகிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் ஜாஹிர் ஹுஸைன், எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் நிர்வாகிகளான எஸ்.எம்.கே.முஹ்யித்தீன், மொகுதூம் நெய்னா, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், அதன் இணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவரும் - 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன், 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், நகரப் பிரமுகர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் உள்ளிட்டோரும், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் அபிமானிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற நிறுவனர் எஸ்.எம்.பி.செய்யித் அஹ்மத் அஸ்ஹர், தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
ஹிஜ்ரீ 1435 ரமழான் மாதத்தில், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |