காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து, கடந்த கல்வியாண்டில் ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தமது அசல் மதிப்பெண் சான்றிதழை (Original Mark Sheet) ஜூலை 15ஆம் நாள் முதல் பெற்றுக்கொள்ளலாம் என அப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வருமாறு:-
பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரையின்படி எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 2015இல் மேல்நிலைப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Sheet) நாளை (15.07.2015) புதன்கிழமை மாலை 4.00 மணி முதல் வழங்கப்படவுள்ளது.
மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழைப் பெற வரும்போது, தங்களது ஆதார் அட்டை நகலை (Aadhaar Card Copy) தவறாது பள்ளி அலுவலகத்தில் ஒப்படைத்து, மதிப்பெண் சான்றிதழைப் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.
தகவல்:
ஆசிரியர் S.B.B.புகாரீ
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross