ரமழான் 27ஆம் நாள் இரவை முன்னிட்டு, காயல்பட்டினம் நகர பள்ளிவாசல்கள் அனைத்தும் தொழுகையாளிகளால் நிரம்பி வழிந்தன. பெரும்பாலான பள்ளிவாசல்கள் மின் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
ஆண்டுதோறும் ரமழான் துவக்க நாளன்று பள்ளிவாசல்களில் காணப்படும் மக்கள் திரட்சி, நாட்கள் செல்லச் செல்ல காணாமற்போகும். மீண்டும் ரமழான் 27ஆம் நாளன்று இரவில் வழமைக்கு மாற்றமான அளவில் ஏராளமான மக்கள் தொழுகையில் அணிவகுத்து நிற்பது வழமை.
அதுபோல, நேற்று (ஜூலை 14) இரவிலும் நகர பள்ளிவாசல்கள் பொதுமக்களால் நிரம்பி வழிந்தது. காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில், ரமழான் இரவுகளில் 6 முதல் 8 வரிசைகள் வரை நிறைந்து காணப்படும் உள்பள்ளி, ரமழான் 27 இரவில் முழுக்க நிறைந்து காணப்பட்டது. வெளிப்பள்ளியிலும் 3 வரிசைகளில் மக்கள் நின்று தொழுகையை நிறைவேற்றினர். இப்பள்ளியில் பொதுமக்கள் அதிகளவில் அணிவகுத்து நின்று சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய காட்சிகள்:-
ஹிஜ்ரீ 1433இல் ரமழான் 27ஆம் நாளன்று நகர பள்ளிவாசல்களில் மக்கள் திரட்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |