காயல்பட்டினம் லெட்சுமிபுரத்தில் நாடார் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவில் மாணவாகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவிற்கு காயல்பட்டினம் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஜே.தங்க பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா ரகு, ஒன்றிய செயலாளா பி.ரத்தினம், காயல்பட்டினம் நகர தலைவர் ஏ.ஜெயமுருகன், லெட்சுமிபுரம் வட்டார தலைவர் ஏ.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி தலைவர் எஸ்.லிங்கசாமி வரவேற்றுப் பேசினார். லெட்சுமிபுரம் பகுதி தலைவர் கே.ராஜேந்திரன் அறிமுக உரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.பி.சரவணக்குமார், கோவை மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபு, தென் சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.வடிவேல், ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் தலைவர் எல்.ராஜாமணி, தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆல்நாத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் நாடார் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் வி.ஒய்.டேனியல் நாடார், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி பயன்பாட்டுப் பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மேடையில் அங்கம் வகித்தோரும் கல்வி பயன்பாட்டுப் பொருட்களை வழங்கினர்.
விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
எஸ்.துரை, எஸ்.ராஜன், பி.காசி, எஸ்.ஜெயராஜ், எஸ்.சிவமுருகன், ராமன், லெட்சுமணன், டி.சிதம்பரம், சுயம்பு, முத்துகுமார், கனகராஜ், ஆறுமுகநேரி அந்தோணி ராஜ், கணேசன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர இளைஞரணி துணை செயலாளர் கே.திருமால் நன்றி கூறினார்.
தகவல் & படங்கள்:
ச.பார்த்திபன் |