உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் அதனடிப்படையில் முடிவெடுக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில், ஸஊதி அரபிய்யாவில் பிறை பார்க்கப்பட்ட தகவலின் படி, இன்று நோன்புப் பெருநாள் இரவு என்றும், நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்றும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஊதி அரபிய்யா நாட்டில் ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவல் பெறப்பட்டு, உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில், இன்று (ஜூலை 16 வியாழக்கிழமை) நோன்புப் பெருநாள் இரவு என்றும், நாளை (ஜூலை 17 வெள்ளிக்கிழமையன்று) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என்றும், பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ இன்று 22.15 மணியளவில் பெருநாள் அறிவிப்பை வெளியிட்டார்.
தகவல்:
M.I.மெஹர் அலீ
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நோன்புப் பெருநாள் அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |