Re:...நிதர்சனங்களை ஏற்றுக் கொள்ள பழகிக் kollungal posted bymackie noohuthambi (kayalpatnam)[15 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41351
சில நிதர்சன உண்மைகள் சில கசப்பான நிகழ்வுகள். இவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் ஜீரணித்துக் கொள்ளவும் பழகி கொள்ளுங்கள். கவலைகள் மறந்து விடும்.
ஒரு லைலதுல் கதர் ஒரு பெருநாள் என்ற காலம் கடந்து விட்டது. அறிவியல் மிகைத்து நிற்கும் காலம் இது. தலைப் பிறை கண்டால் என்ன து ஆ ஓதவேண்டும் என்று நபிகள் நாயகம் நபி தோழர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். கணினியில் தம் உள்ளங்களை பறிகொடுத்தவர்கள் அந்த ஹதீதுக்கு விடை கொடுத்து வழி அனுப்பி விட்டார்கள். அது இல்லங்களில் இருந்தும் மறைந்து விட்டது.
பிறை வானில் இருக்கவே செய்யும் இருந்தாலும் நமது கண்களுக்கு தென்படாமல் மேகம் அதை மறைத்து இருக்கும். நாம் விமானத்தில் பறந்து அதை தேடி அலைய தேவை இல்லை. அல்லது வேறு எங்காவது பிறை தெரிந்திருக்கிறதா என்று மனதை போட்டு குழப்ப தேவை இல்லை.
very simple formula made a great chemistry .there is more heat than light
அதன் பரினாம வளர்ச்சி இந்த நிலைக்கு நம்மை தள்ளி விட்டிருக்கிறது. இப்போது ஒரு து ஆ வை மட்டும் நாம் இறைவனிடம் கேட்கவேண்டும்,
இறைவா, மாற்ற முடிந்தவற்றை மாற்றிக் கொள்ளும் மன தைரியத்தை எனக்கு தா
மாற்ற முடியாதவற்றை ஜீரணித்துக் கொள்ளும் மனப் பக்குவத்தை எனக்குதா
இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறிந்து தெரிந்து எது சரியோ எது நபி வழியோ அதன்படி அமல் செய்யும் நல்ல நசீபையும் எனக்குதா. நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி தருகிறேன் என்று சொல்லும் இறைவா நான் அனுஷ்டித நோன்புகளை அந்த காலங்களில் செய்த நல்ல அமல்களை நீ ஏற்றுக்கொள் என்று மட்டும் கேட்போம். அவன் முடிவு செய்வான் யாருடைய நோன்பை ஏற்றுக் கொள்வது. மற்றப்படி பெருநாள் என்பது செல்வம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு அது வேறு படும். ஏழைகள் எப்போதும் பெருநாளுக்காக ஏங்கியே இருப்பார்கள். அவர்கள் நன்கு உடுத்து உண்டு வாழும் நாள்தான் அவர்களுக்கு பெருநாள். அந்த வாய்ப்பை அவர்களுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுப்போம். அதன் மூலம் நமது பெருநாள்கள் சிறப்பாக அமையும்.
வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள். விமான சீட்டை பெற்று உடன் ஊர் புறப்பட்டு வாருங்கள். மனைவி மக்களுடன் உறவினர்களுடன் பெருநாளை சிறப்பாக கொண்டாடுங்கள். அலை ஓயட்டும் என்று காத்திருக்காதீர்கள். அலைகள் ஓய்வதில்லை பிரச்சினைகள் தீர்வதில்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. நிதர்சனங்களை ஏற்றுக் கொள்ள ஜீரணித்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross