செய்தி: நோன்புப் பெருநாள் 1436: இன்று (ஜூலை 17) பெருநாள் இரவு! நாளை (ஜூலை 18) நோன்புப் பெருநாள்!! ஜாவியா-மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சந்தோஷம் என்ன விலை... posted bymackie noohuthambi (kayalpatnam)[17 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41371
சந்தோஷமும் நிம்மதியும் விலை கொடுத்து வாங்க முடியுமா...
என்னதான் கணினியில் பிறை கணிக்கப்பட்டாலும் வேறுநாட்டில் காணப்பட்டு அப்படியே அதை இங்கு காப்பி அடித்து பெருநாள் கொண்டாடினாலும் பிறை தென்பட்டதா என்ற தேடல் பிறை தென்படவில்லையே என்ற ஏக்கம் இதோ பிறை கண்ட செய்தி வந்துவிட்டது என்ற குதூகலம் அதை தொடர்ந்து தக்பீர் முழக்கத்துடன் எல்லோரும் கட்டி தழுவி ஆலிங்கனம் செய்வது என்பது ஒரு தனி சுகம்தான். அதை அனுபவிப்பவர்களுக்கு தான் அதன் மகத்துவமும் சந்தோஷமும் புரியும்.
ஒரு பெண் பத்து மாதங்கள் தான் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்து திடீரென வலி வந்து மருத்துவ மனைக்கு செல்வதும் அங்கு சுகப் பிரசவத்துடன் குழந்தை பிறப்பது ஒரு சுகம் அது ஆணா பெண்ணா என்று அறிய துடிப்பதில் ஒரு சுகம் ஆண் குழந்தையே பெற்றுக் கொண்டிருப்பவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, பெண் குழந்தையே பிறந்து கொண்டிருந்தவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, குழந்தையே இல்லாமல் ஏங்கியவளுக்கு அழகிய குழந்தை கிடைத்தது என்ற செய்திகள் அந்த இன்பமான நேரம் அவள் இதயம் மகிழும் உற்றார் உறவினர்கள் மகிழ்வார்கள்.
இதே பிள்ளை வயிற்றில் இருக்கும்போதே என்ன குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதற்கு பல அறிவியல் முன்னேற்ற சாதனங்கள் வந்திருந்தாலும் அவற்றை எல்லாம் யாரும் பரீட்சித்து பார்த்து முன் கூட்டியே தெரிந்து கொள்ள ஆசைப் படுவதுமில்லை அப்படி பரீட்சித்துப் பார்த்து சந்தோஷப் படுவதும் இல்லை.
நம்மை காக்க வைப்பதில் இறைவனுக்கு ஒரு சந்தோஷம்
காத்து இருப்பதில் நமக்கு ஒரு சந்தோஷம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross