செய்தி: ஜூலை 25 அன்று தமுமுக சார்பில், சகல வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம்! பேரா. ஜவாஹிருல்லாஹ் பங்கேற்கிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மனித நேயம் posted bymackie noohuthambi (kayalpatnam)[24 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41405
கட்சி மாச்சரியம் இல்லாமல் பார்க்கப்பட வேண்டிய பாராட்டப்பட வேண்டிய ஒரு அருமையான திட்டம். சதகதுன் ஜாரியா இது என்றால் அது மிகை ஆகாது.
அது ஒரு கோடை காலம். அந்த சோகமான நிகழ்வு நடந்த இடம் மெய்ஞானபுரம் பேருந்து நிலையம் என்று நினைக்கிறேன். எனது மச்சான் அவர்கள் எல்லோருக்கும் மிக உதவியானவர் எந்த விஷயத்துக்கும் முன்னின்று பணி புரிபவர். அவர் படித்தது எங்கே என்ன படித்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. மழைக்கு கூட ஒதுங்கியது இல்லை என்று சொல்வார்களே அப்படித்தான் அவரும். ஆனால் அவருக்கு பேச தெரியாத பாஷை இல்லை. அரபியை விட அழகாக அரபி பேசுவார். மலையாளம் ஹிந்தி இவை எல்லாம் அவருக்கு கைவந்த கலை ஊரில் அவரை தெரியாதவர்கள் அறிமுகமில்லாதவர்கள் இருக்க முடியாது. அவர் தன்னாலேயே எல்லோரிடமும் பேச்சு கொடுத்து தனது நகை சுவை மூலம் எல்லோர் உள்ளத்தையும் சுண்டி இழுப்பவர்.
அவர்தான் மக்கி புகாரி அவர்கள்.
அந்த நாளில் அவர் ஒரு நண்பரை அரபு நாடு செல்ல துணைக்கு திருவனந்தபுரம் போனவர் அந்த பேருந்து நிலையத்தில் வைத்து எனக்கு நெஞ்சு வலிக்கிறது நான் ஊருக்கு திரும்பி போகிறேன் நீ சிறப்பாக போய் விட்டு வா என்று வழி யனுப்பிவிட்டு கீழே இறங்கியவர் அப்படியே சாய்கிறார். உயிர் பிரிகிறது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
யாரும் துணைக்கு இல்லாத அந்த நேரத்தில் அல்லாஹுதஆலா ஒரு செய்தியை இங்கு அனுப்புகிறான் காற்றில் கலந்து வந்த அந்த ஓசை நண்பர் முஹ்சின் முர்ஷித் அவர்கள் காதுக்கு எட்டுகிறது. உடனே அவர் யாரிடமும் உறவினர்களிடமும் கூட கேட்காமல் இந்த ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு பறக்கிறார். ஆம் வாகனத்தை ஓட்டவில்லை பறந்து சென்று அந்த உடலை கைப் பற்றி எங்கள் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறார். என்ன நடந்தது எப்படி நடந்தது என்று நங்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றபோது அந்த ஈரம் காயுமுன் ஜின் வேகம் என்பார்களே அப்படி ஒரு வேகம் – எங்கள் வீட்டில் புஹாரி மச்சான் அவர்கள் உடல் கிடத்தப்படுகிறது.
சுபுஹானல்லாஹ். அதற்கு என்ன செலவு என்று கூட அவர் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று வேறு ஆக வேண்டிய வேலைகளை கவனிக்கிறார். இது மனித நேயத்தின் உச்ச கட்டம்.
மறக்க முடியாதது எங்கள் மச்சானின் திடீர் மரணம் மட்டுமல்ல முஹ்சின் முர்ஷித் அவர்களின் தன்னலம் இல்லாத சேவையும்தான். அல்லாஹ் இந்த சேவையை கபூல் செய்வானாக. நமதூர் மக்கள் இந்த நல்ல சேவைக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க வேண்டும்.அவர் இந்த சேவைக்காக மக்களிடம் வைக்கும் கோரிக்கைகளை பரிவுடன் ஏற்றுக் கொண்டு ஆவன செய்ய வேண்டும்.
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்.
மண்ணில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்
விண்ணில் உள்ளவன் உங்களுக்கு உதவி செய்வான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross