தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சகல வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம், 25.07.2015 சனிக்கிழமையன்று 19.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமுமுக - மமக மூத்த தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் மற்றும் தட்டிப் பலகை வருமாறு:-
முன்னதாக, தமுமுக காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏற்கனவே உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் சுமார் 8 ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்ததாகவும், இந்த வாகனம் தேய்மானம் கண்டுள்ளதால், சகல வசதிகளுடன் கூடிய பெரிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டு, உட்கட்டமைப்புப் பணிகளுக்காக கோயமுத்தூரில் உள்ளதாகவும், நோன்புப் பெருநாளையடுத்து, நகர தமுமுக சார்பில் அது முறைப்படி மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படவுள்ளதாகவும், 05.07.2015 ஞாயிற்றுக்கிழமையன்று தமுமுக நகர கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |