கடந்த 20.07.2015 திங்கட்கிழமையன்று நண்பகல் 12.00 மணியளவில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கு காயல்பட்டினம் வழியே சென்ற தனியார் பேருந்து, காயல்பட்டினம் பிரதான வீதியிலிருந்து, கே.டீ.எம். தெரு அல்ஜாமிஉல் அஸ்ஹர் முனையில் திரும்பியது.
சித்தன் தெருவில் வாடகை வீட்டில் குடியிருக்கும் அப்துல் அஜீஸ் என்ற ஆட்டோ ஓட்டுநர், அதே நேரத்தில் கே.டீ.எம். தெருவிலிருந்து பிரதான வீதிக்கு தனது ஆட்டோ வாகனத்தைத் திருப்ப, குறுகிய இடைவெளிக்குள் எதிர்பாராத விதமாக பேருந்துடன் ஆட்டோ சிக்கிக் கொண்டது.
இதையறிந்து உடனடியாக அவ்விடத்தில் திரண்ட பொதுமக்கள் முழு முயற்சியுடன் ஆட்டோவைப் முன்பக்கத்திலிருந்து பின்னோக்கித் தள்ளி, ஓட்டுநரை விடுவித்தனர். நல்ல வேளையாக அவர் காலில் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல்:
S.I.புகாரீ
படங்கள்:
A.S.முஹ்யித்தீன்
நகரில் விபத்து தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 11:09 / 24.07.2015] |