காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் மைதானத்தில், பாட்மிண்டன் உள்விளையாட்டரங்கம், 29.12.2014 அன்று திறப்பு விழா கண்டது. அதன்பின், பல்வேறு போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், அதன் தளத்தை மரத்தாலான தளமாக (Woodden Court) அமைத்திட அந்நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு, 4 லட்சம் ரூபாய் செலவில் அப்பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மர தளத்தில் விளையாட்டுப் போட்டிகள் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 20.30 மணியளவில் நடைபெற்றது. கே.எஸ்.ஸி. க்ரிக்கெட் விளையாட்டு வீரர் ஹாஃபிழ் கே.எம்.என்.ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மர தளம் அமைய முக்கிய காரணமாக இருந்து பெருமுயற்சி மேற்கொண்ட யானி அபுல் ஹஸன், துணைச் செயலாளர் ஃபஸ்லுல் ஹக் ஆகியோரைப் பாராட்டி - விழாவில் சால்வை அணிவிக்கப்பட்டது.
இம்மைதானம், நகர மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையிலான - KSCயின் கனவுத் திட்டம் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற காட்சிப் போட்டியில், விழாவிற்குத் தலைமை தாங்கிய KSC தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், முன்னிலை வகித்த அதன் செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி ஆகியோர் களமிறங்கி விளையாடி, மர தளத்தில் விளையாட்டைத் துவக்கி வைத்தனர். அவர்களுக்கு KSC நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், துஆவுடன் விழா நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், கே.எஸ்.ஸி. நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினரும், பாட்மிண்டன் வீரர்களும் திரளாக்க கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
M.M.ஷாஹுல் ஹமீத்
KSC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |