வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் கேரம் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வி-யுனைட்டெட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
நகரில் விளையாட்டு வீரர்களிடையே ஒற்றுமையையும், விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாகவும், We Are United By Sports என்ற தாரகமந்திரத்துடன் செயல்பட்டுவரும் V-United Sports Club கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் மற்றும் கேரம் போட்டிகளை நடத்தி வருகின்றது.
கேரம் விளையாட்டின் இரண்டாவது ஆண்டு போட்டிகள் 19.07.2015 காலை முதல் சதுக்கைத் தெரு, KAT சங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 14 அணிகள் பங்கேற்றன.
ஹாஃபிழ் முஹம்மது அலி - டூட்டி முஹம்மது மெய்தீன்,
கலாமீஸ் யாஸர் - சல்மான்,
நவ்ஃபல் - முத்து சாலிஹ்,
N.M.M. மஹ்மூது - செய்யது இப்றாஹீம்.
ஆகிய இணைகள் அரையிறுதிக்குத் தேர்வாயின. இதில் வெற்றிபெற்ற ஹாஃபிழ் முஹம்மது அலி இணையும், கலாமீஸ் யாஸர் இணையும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹாஃபிழ் முஹம்மது அலி இணை நேர் செட்களில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் துவக்கமாக இறைமறை வசனத்தை ஹாஃபிழ் முஹம்மது அலி அவர்கள் ஓதினார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் R.S. லத்தீஃப் ஹாஜி வெற்றிபெற்ற இணைக்கு பரிசுகளை வழங்கினார்,
வெற்றிக்கு முனைந்த இணைக்கான பரிசினை வீ-யுனைடெட் குழுமத்தின் U.நூகு வழங்கினார். இப்போட்டித் தொடரின் சிறந்த வீரராக ஹாஃபிழ் முஹம்மது அலி தேர்வு செய்யப்பட்டார், அவருக்கான பரிசினை, போட்டி ஏற்பாட்டுக் குழுவின் ஹைதர்அலி வழங்கினார். அரையிறுதி வரை முன்னேரிய இணைகளுக்கு டூட்டி முஹம்மது மெய்தீன் அவர்களும், ஹாஜி M.M. ஜஹாங்கிர் அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரைக்குப் பின், R.S. லத்தீஃப் ஹாஜி அவர்களின் "துஆ"வுடன் பரிசளிப்பு நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்ச்சிகளை M.ஜஹாங்கிர் தொகுத்து வழங்கினார், போட்டிக்கான ஏற்பாடுகளை வீ-யுனைடெட் குழுமத்தின் நிறுவனர் அலி ஃபைஸல் தலைமையில், நவ்ஃபல், சொளுக்கு முஹம்மது தம்பி, எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில், ஹைதர்அலி மற்றும் வீ-யூனைடெட் குழுமத்தினர் செய்திருந்தார்கள்.
இப்போட்டியில் முதலிடத்தை வென்ற ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அலீ, கடந்த 2012ஆம் ஆண்டில் வி-யுனைட்டெட் சார்பில் நடத்தப்பட்ட கேரம் போட்டியிலும் பங்கேற்று முதற்பரிசை வென்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
2012ஆம் ஆண்டில், வி-யுனைட்டெட் சார்பில் - மன்பஉல் பரக்காத் சங்க வளாகத்தில் நடத்தப்பட்ட கேரம் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
வி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |